தேடுதல்

பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய ஆயர்களின் கூட்டத்தில் திருப்பலி பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய ஆயர்களின் கூட்டத்தில் திருப்பலி 

பாங்காக் விசுவாசக் கோட்பாட்டு கூட்ட அறிக்கை

விசுவாசக் கோட்பாடு சார்ந்த விவகாரங்களில், திருப்பீடத்திற்கும், ஆசிய ஆயர்களுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் உருவாகியுள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாங்காக்கில், திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயப் பிரதிநிதிகளுக்கும், ஆசிய ஆயர் பேரவைகளின் விசுவாசக் கோட்பாட்டுப் பணிக்குழுத் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம், மாபெரும் ஆசியக் கண்டத்தில், விசுவாசக் கோட்பாட்டுப் பணிக்குழுக்கள் மத்தியில் ஒத்துழைப்பை ஊக்குவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சனவரி 15, இச்செவ்வாய் முதல், 18, இவ்வெள்ளி வரை, தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆசியக் கண்டம், கத்தோலிக்க விசுவாசத்தை மிகச் சிறப்பாக வழங்கி, அதைத் தொடர்ந்து வளம் பெறச் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் இடம்பெற்ற உரையாடல்கள், ஆசியச் சுழலுக்கு, மிகப்பொருத்தமான முறையில், நற்செய்தியை அறிவிப்பதற்கும், திருஅவையின் பொதுவான மறைப்பணிக்கு உடன்பிறப்பு உணர்வில் ஒன்றிணைந்து ஒத்துழைக்கவும் உதவின எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர், மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், தற்போதைய தலைவர் மியான்மார் கர்தினால் சார்லஸ் போ, மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே உட்பட முக்கிய பிரதிநிதிகள், ஆசியா சார்பில் கலந்துகொண்டனர்.    

கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் வரவேற்புரை வழங்க, கர்தினால் சார்லஸ் போ அவர்கள், இக்கூட்டத்திற்கென திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2019, 15:03