தேடுதல்

இலங்கையின் திருத்தூதர், புனித ஜோசப் வாஸ் இலங்கையின் திருத்தூதர், புனித ஜோசப் வாஸ் 

இலங்கையில் புனித ஜோசப் வாஸ் திருநாள்

சனவரி 16, இப்புதனன்று, இலங்கையின் Maha-Galgamuwaவில் புனித ஜோசப் வாஸ் அவர்களின் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது - ஆசிய செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 16, இப்புதனன்று, இலங்கையின் Maha-Galgamuwaவில் புனித ஜோசப் வாஸ் அவர்களின் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.

யாழ்ப்பாண ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களும், குருநெகல (Kurunegala) ஆயர் ஹெரால்டு ஆன்டனி பெரேரா அவர்களும் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பரத் திருப்பலியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த வெள்ளியன்று கொடியேற்றத்துடன் துவங்கிய பல்வேறு பக்தி முயற்சிகள், இச்செவ்வாய் மாலையில் நடைபெற்ற மாலைத் திருவழிபாடு, மற்றும் இப்புதனன்று நடைபெற்ற பல்சமய வழிபாடு, மற்றும் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தன என்று ஆசிய செய்தி மேலும் கூறியுள்ளது.

1651ம் ஆண்டு இந்தியாவில் ஒரு போர்த்துகீசிய குடும்பத்தில் பிறந்த ஜோசப் வாஸ் அவர்கள், 1687ம் ஆண்டு இலங்கையில் தன் பணிகளைத் துவக்கினார் என்பதும், இலங்கையின் திருத்தூதர் என்றழைக்கப்படும் இவரை, 2015ம் ஆண்டு சனவரி 14ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொழும்புவில் புனிதராக உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2019, 15:42