தேடுதல்

Vatican News
இஸ்பானிய கர்தினால் Sebastián Aguilar இஸ்பானிய கர்தினால் Sebastián Aguilar   (Elentir)

கர்தினால் Sebastián Aguilar மரணம்

கிளேரிசியன் துறவு சபையைச் சார்ந்த கர்தினால் Sebastián Aguilar அவர்கள், 2014ம் ஆண்டில், கர்தினாலாக உயர்த்தப்பட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

89 வயது நிரம்பிய இஸ்பானிய கர்தினால் Fernando Sebastián Aguilar அவர்கள், Malagaவில், சனவரி 24, இவ்வியாழன் மாலை 6.30 மணியளவில் காலமானார். இதையடுத்து திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை, 223 ஆகவும், 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 129 ஆகவும் மாறியுள்ளன.

1929ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி Calatayudல் பிறந்த கர்தினால் Sebastián Aguilar அவர்கள், 1946ம் ஆண்டில், கிளேரிசியன் துறவு சபையில் வார்த்தைப்பாடுகளை எடுத்தார். 1953ம் ஆண்டு குருவானார். 1957ம் ஆண்டில் உரோம் ஆஞ்சலிக்கம் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சாலமாங்கா பாப்பிறை பல்கலைக்கழகத்தில், 1971ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டுவரை அதிபர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர், Pamplona y Tudela பேராயராக, 1993ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டுவரை பணியாற்றினார்.

25 January 2019, 14:58