தேடுதல்

Vatican News
விசுவாசத்தில் ஊறிப்போன போலந்து மக்கள் விசுவாசத்தில் ஊறிப்போன போலந்து மக்கள்  (ANSA)

முன்னாள் கம்யூனிச நாடுகளுக்கு போலந்து உதவி

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில், திருஅவையை பலப்படுத்த, 6,50,000 யூரோக்களை கடந்த ஆண்டு வழங்கியுள்ளது, போலந்து தல திருஅவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிழக்கு ஐரோப்பா, மற்றும், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் திரு அவைகளுக்கு உதவும் நோக்கத்தில், திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான, இம்மாதம் 9ம் தேதி, செப நாள் மற்றும் நிதி திரட்டும் நாளை சிறப்பித்தது, போலந்து திருஅவை.

1989ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த முயற்சிகளின் வழியாக, கடந்த ஆண்டில், கிழக்கு ஐரோப்பா, மற்றும், மத்திய ஆசிய திருஅவைகளுக்கு 6,50,000 யுரோக்களை வழங்கியுள்ளது போலந்து திருஅவை.

வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதற்கும், பங்குதளங்கள் அமைக்கப்படுவதற்கும், பிறரன்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்நிதி உதவியுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்று, தனி நாடுகளாக இயங்கும், முன்னாள் கம்யூனிச நாடுகளின் திருஅவைகளுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டு வருவதாகக் கூறும் போலந்து ஆயர்கள், ஒவ்வோர் ஆண்டும், பல்வேறு மையங்களிலிருந்து உதவி கேட்டு, ஏறத்தாழ 300 விண்ணப்பங்கள் வருவதாகவும் தெரிவித்தனர்.

10 December 2018, 15:39