தேடுதல்

மனிலா கர்தினால் தாக்லே மனிலா கர்தினால் தாக்லே 

அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து எச்சரிக்கை

பிலிப்பைன்சில் பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் கிறிஸ்மஸ் நவநாள் தொடக்கத் திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பைன்சில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து எச்சரிக்கை விடுத்தார், மனிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு ஒன்பது நாள் நவநாள் திருப்பலியை, டிசம்பர் 16, இஞ்ஞாயிறன்று நிறைவேற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், மற்றவரை சிறுமைப்படுத்தி வாழ்கின்ற வாழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சி உண்மையானதல்ல என்று கூறினார்.

கத்தோலிக்கர், இத்தகைய வாழ்வில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கர்தினால் தாக்லே அவர்கள், பிறரை அவமதிப்பதற்கு அதிகாரம்  பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறினார்.

பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் ஆயர்களுக்கு எதிராகவும், ஆயர்கள் கொலைசெய்யப்பட வேண்டுமெனவும் பேசிவரும்வேளை, கர்தினால் தாக்லே அவர்கள், தனது மறையுரையில் இவ்வாறு கூறினார்.

பிலிப்பைன்சில் பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் கிறிஸ்மஸ் நவநாள் தொடக்கத் திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அந்நாட்டில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ளும், மிக முக்கிய சமய நிகழ்வுகளில், இதுவும் ஒன்றாகும். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2018, 16:03