தேடுதல்

பிரான்சிஸ்கன் துறவிகளுடன், புனித பூமியின் காவலரான, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன் பிரான்சிஸ்கன் துறவிகளுடன், புனித பூமியின் காவலரான, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன் 

புனித பூமியின் காவலரின் கிறிஸ்மஸ் செய்தி

சிரியா, ஏமன் உட்பட, உலகின் பல நாடுகளில் எண்ணற்ற மக்கள், இருள்சூழ்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அந்த இரவில், பெத்லகேம் இடையர்கள் வாழ்வில் மட்டுமல்ல, இன்றும், நம் ஒவ்வொருவரின் மற்றும் முழு மனித சமுதாயத்தின் இரவிலும், குழந்தை இயேசு தொடர்ந்து ஒளியேற்றிக் கொண்டிருக்கின்றார் என்று, புனித பூமியின் காவலர் கூறியுள்ளார்.

புனித பூமியின் காவலரான, பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பிரான்சிஸ்கோ பேட்டன் அவர்கள், வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழக்கவும், தங்களின் சொந்த குடும்பங்கள் கலாச்சாரம், மற்றும், நாடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரவும் காரணமான இரத்தம் சிந்தும் போர்களின் இரவில், பல ஆண்டுகளாக எண்ணற்றோர் வாழ்ந்து வருகின்றனர் என்ற கவலையையும் தெரிவித்துள்ளார், அருள்பணி பிரான்சிஸ்கோ பேட்டன்.

பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியாலும், பலர் கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், திருக்குடும்பம் அனுபவித்ததையே இவர்களும் அனுபவிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ள, அருள்பணி பேட்டன் அவர்கள், வன்முறையால் ஏற்பட்ட, இருளையும் பலர் அனுபவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இறைவனிடமிருந்து தொலைவில் இருக்கும் பாவத்தின் இருள், வாழ்வதற்கான உரிமையின்றி, மனித மாண்பை இழந்து வாழும் நிலை போன்றவைகளையும் சுட்டிக்காட்டியுள்ள அருள்பணி பேட்டன் அவர்கள், குழந்தை இயேசு, இருளில் வாழ்கின்ற அனைவர் வாழ்விலும் ஒளியை ஏற்றுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2018, 15:51