தேடுதல்

Chapatoli புனித தோமையார் ஆலயத்திலிருந்த அன்னை மரியா திருவுருவம் Chapatoli புனித தோமையார் ஆலயத்திலிருந்த அன்னை மரியா திருவுருவம்  

அசாம் ஆலயத் தாக்குதல் வெறுப்பின் அடையாளம்

அசாம் ஆலயத் தாக்குதல் வெறுப்பின் விதைகளை விதைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது, இது குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை அவசியம் – Dibrugarh ஆயர் Joseph Aind

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில், கத்தோலிக்க ஆலயம் ஒன்று தாக்கப்பட்டிருப்பது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படுமாறு, தலத்திருஅவை அதிகாரிகள் காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 15, கடந்த சனிக்கிழமையன்று, Dibrugarh மறைமாவட்டத்திலுள்ள Chapatoli புனித தோமையார் ஆலயத்தில், திருச்சிலுவை, சிலுவைப்பாதை படங்கள், செபப் புத்தகங்கள் போன்றவை சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் அன்னை மரியா திருவுருவம் வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்க்கெதிரான வெறுப்புச் செயலாக நோக்கப்படும் இந்நடவடிக்கை, கிறிஸ்மஸ்க்கு முன்னர், வடகிழக்கு மாநிலத்தில், மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவினையைத் தூண்டும் திட்டமாக உள்ளது என்றும், தலத்திருஅவை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

88 ஆண்டுகள் பழமை கொண்ட இந்த ஆலயத்தில், இதற்கு முன்னர், இத்தகைய வெறுப்புச் செயல் இடம்பெற்றது கிடையாது என்று, அந்த ஆலய பங்குத்தந்தை சிப்ரியான் லக்ரா அவர்கள் கூறினார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2018, 16:01