தேடுதல்

Vatican News
அயர்லாந்து ஆயர்களுடன் திருத்தந்தை அயர்லாந்து ஆயர்களுடன் திருத்தந்தை  (ANSA)

தங்குமிடமற்றோருக்கு சத்திரத்தில் ஓர் அறை

அனைவருக்கும் தங்குமிடங்களை வழங்குவதில், இலாப நோக்கற்ற அணுகுமுறைகள் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தங்குமிடமின்றி தவிப்போருடன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு 'சத்திரத்தில் ஓர் அறை' என்ற தலைப்பில் மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அயர்லாந்து ஆயர்கள்.

இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் மாண்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த சுற்றறிக்கை, வீடற்ற நிலைகளுக்கான அடிப்படைக் காரணங்களை ஆய்வு செய்கிறது.

தங்குமிடம் என்பது, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்பதை மனதில் கொண்ட, இலாப நோக்கமற்ற அணுகுமுறைகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், அனைவருக்கும் தங்குமிடங்களை வழங்கவேண்டிய அரசின் கடமைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.

தங்குமிட வசதிகளில்லாதபோது குழந்தைகளின் கல்வி, நலம் மற்றும் வருங்கால வாழ்வு பாதிக்கப்படும் என்பதையும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர், ஆயர்கள்.

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான தங்குமிடங்கள் கிடைக்க வழி செய்யவேண்டும் என்பது குறித்துச் சட்டங்கள் இயற்றப்பட, பொது விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்படவேண்டும் என்ற பரிந்துரைகளையும் ஆயர்கள் முன்வைத்துள்ளனர்.

02 October 2018, 17:23