தேடுதல்

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டுத்திருப்பலி ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டுத்திருப்பலி 

விசுவாச அனுபவங்களும் அன்பின் சேவைகளும் இணைந்திருத்தல்

துன்புறும் மக்களின் அழுகுரல், சுய விருப்பப் பணியாளரின் சேவை, விசுவாச அனுபவம், அன்பின் சேவை, மதங்களிடையே உரையாடல் ஆகியவை குறித்து ஐரோப்பிய ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

போலந்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்திக்கும், திருஅவையில் பாலியல் முறைகேடுகள் குறித்து விவாதிப்பதற்கென ஆயர் பேரவைகளின் தலைவர்களை, வரும் பிப்ரவரியில் வத்திக்கானிற்கு வருமாறு திருத்தந்தை அழைத்திருப்பதற்கும், ஆயர்கள், தங்கள் நன்றியை வெளியிட்டுள்ளனர்.

இந்நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் துன்புறும் மக்களின் அழுகுரல்களை தாங்கள் கேட்பதாகவும், அம்மக்களின் துன்பங்களை அகற்ற பணியாற்றிவரும் சுய விருப்பப் பணியாளர்களுக்கு தங்கள் ஊக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாகவும், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டத்தின் இறுதி அறிக்கை கூறுகிறது.

அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் சாட்சிய வாழ்வில் பயிற்சி அளிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என உரைக்கும் ஆயர்களின் அறிக்கை, விசுவாச அனுபவங்களும், அன்பின் சேவைகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

வாழ்விற்கு வழங்கப்படும் மதிப்பு குறைந்து வருதல், குடும்பங்கள் உடைதல், சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல், குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோரின் துன்ப நிலை போன்றவை குறித்தும் கவலையை வெலியிட்டுள்ள ஆயர்கள்,  இத்தகைய நேரத்தில் மதங்களிடையேயும், கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயும் இடம்பெற வேண்டிய உரையாடல் குறித்து தங்கள் ஊக்கத்தையும் வழங்கியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2018, 16:53