தேடுதல்

கர்தினால் டி’னார்டோ கர்தினால் டி’னார்டோ  

கர்தினால் டி’னார்டோ அறிக்கை

செப்டம்பர் 13ம் தேதியன்று திருத்தந்தையுடன் கலந்துரையாடிய பின்னர், அமெரிக்க ஜக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டி’னார்டோ அவர்கள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

பாலியல் முறைகேடுகள் என்ற பிரச்சனையின் விளைவாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலத் திருஅவை சந்தித்துவரும் சவால்கள் குறித்து, அந்நாட்டு ஆயர் பேரவையின் உயர் மட்டத் தலைவர்கள், திருத்தந்தையுடன் நடத்திய சந்திப்பு, நீண்டநேரம் இடம்பெற்றது, அதேநேரம், மிகவும் பலனுள்ளதாக அமைந்தது என்று, கர்தினால் டேனியல் டி’னார்டோ அவர்கள் கூறியுள்ளார்.  

இவ்வியாழனன்று திருத்தந்தையுடன் கலந்துரையாடிய பின்னர், கர்தினால் டி’னார்டோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் தலைவரும், பாஸ்டன் பேராயருமான, கர்தினால் பாட்ரிக் ஓ’மேலி, அமெரிக்க ஆயர் பேரவையின் துணைத்தலைவர், பேராயர் ஹோஸே ஹொராசியோ கோமஸ், செயலர் அருள்பணி பிரையன் பிரான்ஸ்ஃபீல்டு ஆகியோருடன் தான் திருத்தந்தையைச் சந்தித்ததாகவும், இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு திருத்தந்தையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றவுள்ளதாகவும் கூறியுள்ளார், கர்தினால் டி’னார்டோ. இச்சந்திப்பின் இறுதியில், மூவேளை செபம் சொல்லி, காயங்களைக் குணப்படுத்துவதற்கு உழைக்கும் தங்களுக்கு இறைவனின் இரக்கத்தையும், சக்தியையும் மன்றாடியதாகவும் கர்தினாலின் அறிக்கை கூறுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2018, 16:41