தேடுதல்

அமேசான் காடுகள் அமேசான் காடுகள் 

இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாளுக்கு விண்ணப்பம்

கிறிஸ்தவ மறையில் காணப்படும் பல்வேறு பிரிவுகளையும் தாண்டி, இயற்கையின் பாதுகாப்பு என்ற பணியில் அனைவரும் இணைந்து வர அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 1, வருகிற சனிக்கிழமை, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றிப்பும், ஐரோப்பிய திருஅவைகள் அவையும் இணைந்து, விண்ணப்பம் ஒன்றை, ஆகஸ்ட் 30, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவராக, 1989ம் ஆண்டு பணியாற்றிய, முதுபெரும் தந்தை திமித்ரியோஸ் (Dimitrios) அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உலக செப நாளை, கத்தோலிக்க திருஅவையின் செப நாளாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு அறிவித்தார்.

கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைந்து சிறப்பிக்கும் நான்காவது இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாளுக்கென, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் ஒன்றிப்பின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்களும், ஐரோப்பிய திருஅவைகள் அவையின் தலைவர் அருள்திரு கிறிஸ்டியான் க்ரீகர் அவர்களும் இணைந்து இந்த விண்ணப்ப அறிக்கையை, காணொளி வடிவில் வெளியிட்டுள்ளனர்.

மனிதர்களையும், மக்களினங்களையும், இயற்கையையும் மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளார் என்று கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கிறிஸ்தவ மறையில் காணப்படும் பல்வேறு பிரிவுகளையும் தாண்டி, இயற்கையின் பாதுகாப்பு என்ற பணியில் அனைவரும் இணைந்து வருவது இன்றைய காலம் நமக்கு விடுத்துள்ள சவால் என்று அருள்திரு க்ரீகர் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2018, 15:05