தேடுதல்

Vatican News
யாங்கூன் புனித மரியா பேராலயத்தில் திருத்தந்தையின் திருப்பலி யாங்கூன் புனித மரியா பேராலயத்தில் திருத்தந்தையின் திருப்பலி  (AFP or licensors)

மோதல்கள், ஏழ்மையால் துன்புறும் கத்தோலிக்கர்

மியான்மார் கத்தோலிக்கர், திருஅவையின் போதனைகள், திருத்தந்தையின் மியான்மார் திருத்தூதுப் பயணம் போன்றவற்றால், நற்செய்திப் பணிக்கு புதிய உந்துதல் பெறுகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

சமய அடக்குமுறை, இன மோதல்கள், பொருளாதாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்களை, மியான்மார் கத்தோலிக்கர் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர் என, ஆசியச் செய்தி கூறுகின்றது.

89.2 விழுக்காடு புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மாரில், எப்போதும் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள், இறைவார்த்தையை அறிவிப்பதற்கு, திருஅவையின் போதனையால் ஊக்கம் பெறுகின்றனர் என்று, அச்செய்தி கூறுகின்றது.

மியான்மாரில் மறைபோதகர்களின் கடும் முயற்சிகள் மற்றும் அவர்களின் மறைசாட்சிய வாழ்வால், தற்போது அந்நாட்டில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டுக்கும் சற்று அதிகமாகியுள்ளது என்றும், ஆசியச் செய்தி உரைக்கின்றது.

யாங்கூனைத் தொடர்ந்து கச்சின் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் சமய அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும், இராணுவத்திற்கும், உள்ளூர் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெறும் உள்நாட்டுச் சண்டை, மக்களின் அன்றாட வாழ்வைக் கடினமாக்கி வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது. (AsiaNews)

22 August 2018, 16:29