தேடுதல்

ஆசிய ஹாக்கி விளையாட்டு ஆசிய ஹாக்கி விளையாட்டு 

ஆசிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு கத்தோலிக்கர் உதவி

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் 11 ஆயிரம் வீரர்கள் மற்றும் 5,000 அலுவலகர்களுக்கு அருள்பணியாளர்கள், கத்தோலிக்க மருத்துவர்கள் மற்றும் பொதுநிலையினர் உதவி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பாங் நகரங்களில் இம்மாதம் 18ம் தேதி முதல், செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலகர்களுக்கு, கத்தோலிக்க அருள்பணியாளர்களும், பொதுநிலையினரும் உதவுவதற்குத் தயாரித்து வருகின்றனர்.

45 நாடுகளிலிருந்து ஏறத்தாழ 11 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் எல்லாருக்கும், குறிப்பாக, வெளிநாட்டு மொழிகளைப் பேசுவோர்க்கு உதவுவதற்கும், கத்தோலிக்க விளையாட்டு வீரர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றவும், அருள்பணியாளர்கள் தங்களைத் தயாரித்து வருகின்றனர்.

இந்நிகழ்வை, பல கலாச்சார மற்றும் பல்சமய நிகழ்வாக அமைப்பதற்கும் கத்தோலிக்கர் முயற்சித்து வருகின்றனர் என, யூக்கா செய்தி கூறுகின்றது.

இந்தோனேசியாவில் முதல்முறையாக, 1962ம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2018, 16:18