தேடுதல்

Vatican News
கர்தினால் ஜோசப் கூட்ஸ் கர்தினால் ஜோசப் கூட்ஸ்   (AFP or licensors)

செபத்தால் ஆதரவளியுங்கள், கர்தினால் கூட்ஸ்

கடந்த ஜூன் 29ம் தேதி புதிய கர்தினாலாக உயர்த்தப்பட்ட காரச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், பாகிஸ்தான் ஆயர்கள் அனைவரோடும் இணைந்து, நன்றி திருப்பலி நிறைவேற்றினார்

மேரி தெரேசா – வத்திக்கான்

நான் மிகவும் திறமையானவன் என்பதற்காக அல்ல, மாறாக, திருத்தந்தைக்கு நெருக்கமாக இருந்து, பணியாற்றுவதற்காக, கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று தான் கருதுவதாக, பாகிஸ்தானின் புதிய கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆயர்கள் அனைவரோடும் இணைந்து, கராச்சி புனித பாட்ரிக் பேராலயத்தில் நன்றி திருப்பலி நிறைவேற்றிய, கராச்சி உயர்மறைமாவட்ட பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், தான் கர்தினாலாக உயர்த்தப்பட்டது, தலத்திருஅவைக்கும், பாகிஸ்தானுக்கும் மதிப்பை வழங்குவதாய் உள்ளது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் அரசு மற்றும் சமயத் தலைவர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்வேளை, கர்தினாலாக, தான் உரோமையிலிருந்து திரும்பியபோது, கராச்சி விமான நிலையத்திலிருந்து, புனித பாட்ரிக் பேராலயம் வரை, தனக்குக் கொடுக்கப்பட்ட அமோக வரவேற்பை நினைவுகூர்ந்தார், கர்தினால் ஜோசப் கூட்ஸ். கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், ஏனைய மதத்தவரும் தனக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்த, கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், அனைத்து விசுவாசிகளும் தனக்காகச் செபிக்கவும், செபத்தால் தனக்கு ஆதரவு அளிக்கவும் கேட்டுக்கொண்டார். (Fides)

10 August 2018, 15:14