தேடுதல்

லீமாவில் திருத்தந்தையின் திருப்பலி லீமாவில் திருத்தந்தையின் திருப்பலி 

ஜூலை 22, நிக்கராகுவா நாட்டிற்காக செபம்

நீதியின் இறைவாக்கினர்களாகிய நிக்கராகுவா ஆயர்கள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆற்றிவரும் பணிகளை, நம்பிக்கையுடன் தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நிக்கராகுவா நாட்டில் துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள அதேவேளை, ஜூலை 22, வருகிற ஞாயிறை, அந்நாட்டிற்காகச் செபிக்கும் நாளாக அறிவித்துள்ளது, இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி ஆயர்கள் இணைந்து இவ்வாரத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிக்கராகுவா நாட்டின், தற்போதைய வேதனை நிறைந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளை அனுபவித்துவரும் ஆயர்கள் மற்றும் மக்களுடன் தாங்கள் மிக அருகாமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜூலை 20, இவ்வெள்ளிக்கிழமையன்று, உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ள நிக்கராகுவா ஆயர்கள், திருநற்கருணை ஆராதனை, செபமாலை, உண்ணாநோன்பு, தவம், திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல் போன்றவை உட்பட, ஒரு மாத செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

2007ம் ஆண்டில் பதவிக்கு வந்து, 2016ம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா அவர்களுக்கு எதிராக, கடந்த ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் காவல்துறையும், உப இராணுவமும் மேற்கொண்ட அடக்குமுறைகளில் 300க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்(ACI Prensa)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2018, 15:13