உக்ரைனின் கார்கிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் காயம்!
போர்களில் குழந்தைகள் இலக்காகக் கொள்ளப்படக் கூடாது, அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் : யுனிசெப் நிறுவனம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனின் கார்கிவ் பகுதியின் டெர்காச்சியில், மே 2, இவ்வியாழனன்று நடந்த தாக்குதலில் 8 குழந்தைகள் காயமடைந்தனர் என்ற சோகமான செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது யுனிசெப் நிறுவனம்.
மேலும் இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான தகவல்களின்படி Zolochiv-இல் ஒரு சிறுவன் காயமடைந்தான் என்று உரைக்கும் அச்செய்தி, போர்களில் குழந்தைகள் இலக்காகக் கொள்ளப்படக் கூடாது என்றும், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது அந்நிறுவனம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
03 May 2024, 16:15