சுவிட்சர்லாந்தில் பனி  படர்ந்த மலையடிவாரம் சுவிட்சர்லாந்தில் பனி படர்ந்த மலையடிவாரம் 

இனியது இயற்கை – பனிக்கட்டிகளை உருகவைக்கும் தூசி!

தூசிகள் சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு, சுற்றியுள்ள பகுதியை வெப்பமாக்குகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காடழிப்பு, விவசாய பிரச்சனைகள், பெரிய அளவிலான தொழில்துறை கட்டுமானங்கள் ஆகியவை தூசியின் அளவை அதிகரிக்கின்றன, இத்தூசி வேகமாகப் பரவி பனிக்கட்டிகளை உருகச் செய்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பசுமை வாயுக்களால் ஏற்படும் புவி வெப்பமயமாதல்,  பனிக்கட்டிகள் உருகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது முன்னரே நாம் அறிந்த ஒன்றுதான். இருப்பினும், இமயமலையில் பனி உருகுவதற்குத் தூசியும் கணிசமான அளவில் ஒரு காரணியாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பனி மூடிய இமயமலைகளின் மேல் தூசி வீசுவது பனி உருகும் வேகத்தைக் கூட்டக்கூடும் என்று இயற்கை காலநிலை மாற்றத்தால் வெளியிடப்பட்ட இன்னொரு ஆய்வு கூறுகிறது. தூசிகள் சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு, பின்னர் சுற்றியுள்ள பகுதியை வெப்பமாக்குகிறது.

பனியை உருக்குவதற்குப் போதுமான அளவு வெப்பம் இதில் நிறையவே இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வளிமண்டல விஞ்ஞானி யுன் கியான் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சந்தன் சாரங்கி ஆகிய இருவரும் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள ஆய்வறிக்கையில், "ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தூசி வீசுவதும், மிக உயர்ந்த உயரத்தில் பறப்பதும் பனி சுழற்சியில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2022, 12:19