உலகத் தொழிலாளர்களில் ஐந்து விழுக்காட்டினர், பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் உலகத் தொழிலாளர்களில் ஐந்து விழுக்காட்டினர், பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் 

உலகிலுள்ள தொழிலாளர்களில் 5% புலம்பெயர்ந்தோர்

உலகிலுள்ள 16 கோடியே 90 இலட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளரில் 58 விழுக்காட்டினர் ஆண்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவிலுள்ள தொழிலாளர்களில் ஏறத்தாழ ஐந்து விழுக்காட்டினர், பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் என்றும், இவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டில், ஐம்பது இலட்சமாக அதிகரித்தது என்றும், ILO எனப்படும், உலக தொழில் அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

2019ம் ஆண்டில், பன்னாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உலகிலுள்ள தொழிலாளர்களில் இருபது பேருக்கு ஒருவர் என இருந்தனர் என்று கூறும் அவ்வறிக்கை, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களைத் தேடும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொதுவாக, நோயாளிகள் பராமரிப்பு, வாகனங்கள் ஓட்டுதல், வேளாண்மை, உணவு தயாரித்தல், பொருள்களைக் கொண்டுசெல்லுதல் போன்ற வேலைகளையே செய்கின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இவ்வறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய, ILO அமைப்பின், தொழில் சூழல் பிரிவின் இயக்குனர் Manuela Tomei அவர்கள், இம்மக்கள், புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் பொருளாதாரம் மற்றும், சமுதாயங்களுக்கு பெருமளவில் உதவிவருகின்றனர் என்று கூறினார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உலகளாவிய பொருளாதாரத்திற்கு பெருமளவில் உதவி வந்தாலும், அவர்களில் பலரின் வேலை, நிரந்தரமற்று உள்ளது, இந்நிலையை, கோவிட் பெருந்தொற்று மேலும் மோசமடையச் செய்துள்ளது என்றும், ILO அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகிலுள்ள 16 கோடியே 90 இலட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளரில் 58 விழுக்காட்டினர் ஆண்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2021, 14:55