அமைதியை வேண்டும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதியை வேண்டும் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் 

13 வயது சிறுமியை மதமாற்றம் செய்து திருமணம் புரிந்தவர் கைது

சிறுவயது திருமணம், கட்டாய மதமாற்றம் ஆகியவைகளுக்கு எதிரான போராட்டம் பாகிஸ்தானில் துவக்க காலங்களில் தோல்வியை சந்தித்தாலும், தற்போது வெற்றியை நோக்கி பயணித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

13 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை கட்டாய மதமாற்றம் செய்து, அவரை பலவந்தமாக திருமணம் செய்த 44 வயது நிரம்பிய பாகிஸ்தான் இஸ்லாமியர், நீண்ட சட்ட போராட்டத்திற்குப்பின் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

13 வயதுடைய கத்தோலிக்க சிறுமி Arzoo Raja என்பவரை, 44 வயதுடைய Ali Azhaar என்பவர் கடத்திச் சென்று, அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தி, திருமணமும் புரிந்துகொண்ட நிலையில், இதற்கு எதிரான போராட்டத்தை நடத்திய அச்சிறுமியின் பெற்றோரும், அச்சிறுமியும், துவக்க காலங்களில் வழக்காடு மன்றங்களில் தோல்வியை சந்தித்தாலும், தற்போது சிந்து மாநில உயர் நீதிமன்றம், குற்றவாளியை கைதுசெய்யப் பணித்துள்ளது, வரவேற்கப்பட வேண்டியது என, மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு முடிவடையும் வரை சிறுமி Arzoo Raja, பெண்கள் பாதுகாப்பிடம் ஒன்றில் வைக்கப்படவேண்டும் என தீர்ப்பை வழங்கியுள்ள நீதிமன்றம், இச்சிறுமியின் கடத்தலுக்கு உதவிய Azhaarன் இரு சகோதரர்களும், ஒரு நண்பரும் கைதுசெய்யப்படவும் வழி செய்துள்ளது.

சிறுமி Arzoo Raja திருமண வயதுடையவர், அவர் விருப்பப்பட்டே தன்னை திருமணம் செய்துகொண்டார் என Ali Azhaar, நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில்,  Arzoo Raja, 13 வயதே நிரம்பியவர் என அவரின் குடும்பம் அதற்குரிய சான்றுகளைச் சமர்ப்பித்துள்ளபோதிலும், அவரின் வயதை நிர்ணயிக்க மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளுமாறு, மருத்துவர்களுக்கு கட்டளையிட்டுள்ளது சிந்து நீதி மன்றம். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2020, 16:16