குழந்தை தொழில்முறை குழந்தை தொழில்முறை 

இலங்கையில் சிறார் தொழிலாளரின் குறைந்த வயது 16

இலங்கையில் குறைந்தது, ஒரு இலட்சத்து மூவாயிரம் சிறார் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தொழிலில் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குழந்தை தொழில்முறையை எதிர்க்கும் உலக நாளான, ஜூன் 12, இவ்வெள்ளியன்று, இலங்கை அரசு, அந்நாட்டில் சிறார் தொழிலாளரின் குறைந்த வயதை, 14லிருந்து 16 ஆக வரையறைத்துள்ளது.

எக்காலத்தையும்விட இக்காலத்தில் குழந்தை தொழிலாளர் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அறைகூவலுடன், இவ்வெள்ளியன்று இந்த உலக நாள் சிறப்பிக்கப்பட்டவேளை, இலங்கை அரசு இத்தகைய தீர்மானத்தை அறிவித்துள்ளது.

உலக தொழில் நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகில் குறைந்தது 15 கோடியே 20 இலட்சம் சிறார் வேலை செய்கின்றனர், இவர்களில் 7 கோடியே 20 இலட்சம் சிறார், ஆபத்தான சூழல்களில் உழைக்கின்றனர்.

மேலும், கோவிட்-19 சூழல், குழந்தை தொழில்முறையை அதிகரித்துள்ளது என்றும், ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது.

2016ம் ஆண்டின் நிலவரப்படி, இலங்கையில் குறைந்தது, ஒரு இலட்சத்து மூவாயிரத்து, 704 சிறார் வேலை செய்கின்றனர். இவர்களில் 39,007 பேர் ஆபத்தான வேலைகளில் உள்ளனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2020, 16:04