பாகிஸ்தானில் ஆசியா பீபி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து போராடிய அடிப்படை வாதிகள் பாகிஸ்தானில் ஆசியா பீபி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து போராடிய அடிப்படை வாதிகள்  

1990லிருந்து 70 பேர், தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கொலை

பாகிஸ்தான் நாட்டில் தெய்வ நிந்தனை சட்டத்தின் கீழ் 80 பேர் இன்னும் சிறைத்தணடனை அனுபவித்து வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்  செய்திகள்

பாகிஸ்தான் நாட்டில், தெய்வ நிந்தனை சட்டத்தின் கீழ் மக்கள் கைது செய்யப்படுவது தொடர்வதாகவும், இச்சட்டத்தின் கீழ் 80 பேர் இன்னும் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

'Freedom of Thought' என்ற அமைப்பின் கூற்றுப்படி, பாகிஸ்தான் நாட்டில் 1987ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டுவரை, தெய்வநிந்தனைச் சட்டத்தின் கீழ் 1170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஒவ்வோர் ஆண்டும் புதிய வழக்குகள் பெருமெண்ணிக்கையில் பதிவுசெய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் 1990ம் ஆண்டு முதல் 70 பேர், தெய்வ நிந்தனை குற்றச்சாட்டை முன்வைத்து கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.

தெய்வநிந்தனைக் குற்றத்தின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, எட்டு ஆண்டுகள் சிறையில் துன்புற்றபின், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி என்ற கிறிஸ்தவப் பெண்மணி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், நாட்டைவிட்டு வெளியேற முடிந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2019, 16:22