மாங்காய் தோப்பு மாங்காய் தோப்பு 

பூமியில் புதுமை : அனைவருக்கும் பொதுவான பூமி

தொழில்நுட்ப வளர்ச்சிக்கென பூமித்தாயின் நலனை தியாகம் செய்துகொண்டிருக்கிறோம். வனத்தையும், நிலத்தையும், நீரையும் மதிக்காமல் தவறாக பயன்படுத்துகிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இந்த மானுடத்தின் அத்தனை பேருக்கும் ஒரு தாய் உண்டு. அவரே ‘பூமித்தாய்’. நம் முன்னோர்கள் பூமியை வணங்கினார்கள். ஆனால் நாமோ, தொழில்நுட்ப வளர்ச்சிக்கென பூமித்தாயின் நலனை தியாகம் செய்துகொண்டிருக்கிறோம். பூமித்தாய் போர்த்தியிருந்த பச்சைப் போர்வைகளை நம் சுயநலத்துக்காகச் சுருட்டினோம். வனத்தையும், நிலத்தையும், நீரையும் மதிக்காமல், தவறாய் பயன்படுத்தினோம்.

குறைந்தபட்சம், 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 வகைகளும், சோளத்தில் 5000 வகைகளும், மிளகுப் பயிரில் 500 வகைகளும், மாமரத்தில் 1000 வகைகளும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக, சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இத்தனை உயிர்களுக்கும், இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொள்ளாமல், சுயநல வாழ்க்கையை அமைத்துக்கொண்டேப் போனோமெனில், பூமித்தாயின் நலம் கெடும், மண்ணின் துயர் பெருகும்.

வருங்காலத் தலைமுறை, நம்மை வாழ்த்தும்படியாக, நம் வாழ்வை மாற்றியமைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2019, 15:25