அமேசான் கிளையாறில் ஒன்று அமேசான் கிளையாறில் ஒன்று 

பூமியில் புதுமை: அமேசான் ஆற்றின் தண்ணீர்

மழைக்காலத்தில், அமேசானிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு விநாடிக்கு மூன்று இலட்சம் கன மீட்டர் அளவு தண்ணீர் கலக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

தென் அமெரிக்காவில் பிரெஞ்ச் கயானா, கயானா குடியரசு, சுரினாம், வெனெசுவேலா, கொலம்பியா, பிரேசில், பொலிவியா, பெரு, ஈக்குவதோர் ஆகிய ஒன்பது நாடுகள் அமேசான் மழைக்காடுகளைக் கொண்டுள்ளன. இப்பகுதியில் பாயும் அமேசான் ஆற்றுப்படுகை, உலகிலே பெரிய ஆற்றுப்படுகையாய், தென் அமெரிக்காவின் ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டுப் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்த வடிகால் பகுதி, மேற்கிலிருந்து கிழக்காக, பெரு நாட்டின் Iquitos நகரிலிருந்து, பிரேசில் நாடு வழியாக, அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றது. ஐந்து டிகிரி வட நிலநேர்கோட்டிலிருந்து இருபது டிகிரி தென் நிலநீர்கோடு வரை இந்த ஆறு தண்ணீரைச் சேமிக்கின்றது. அமேசான் ஆறும், அதன் துணை ஆறுகளும், காடுகள் வழியாகப் பாய்ந்து, ஒவ்வொரு மழைக்காலத்திலும், அவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தில், ஆற்றின் நீர்மட்டம், ஒன்பது மீட்டருக்கு மேலாகவே உயர்ந்து, காடுகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கும். கோடை காலத்தில், ஒரு இலட்சத்து பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி தண்ணீரால் நிறைந்திருக்கும். மழைக்காலத்தில், அமேசான் ஆற்றுப்படுகை, மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் அளவில் வெள்ளம் சூழ்ந்திருக்கும். மழைக்காலத்தில், அமேசானிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு விநாடிக்கு மூன்று இலட்சம் கன மீட்டர் அளவு தண்ணீர் கலக்கும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2019, 15:36