போலந்தில் 2ம் உலகப் போரின் அழிவு போலந்தில் 2ம் உலகப் போரின் அழிவு 

அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள்

அணு ஆயுதங்கள், முன்வைக்கும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கு உண்மையான ஒரே வழி, அவற்றை ஒழிப்பதாகும் - ஐ.நா. பொதுச்செயலர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகிலுள்ள அணு ஆயுதங்கள், மனித சமுதாயத்திற்கு, ஏற்கமுடியாத ஆபத்தை முன்வைக்கின்றன, இவை முன்வைக்கும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கு உண்மையான ஒரே வழி, அவற்றை ஒழிப்பதாகும் என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 26, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், கூட்டேரெஸ்.

மேலும், அணு ஆயுதமற்ற உலகம் என்ற ஒப்பந்தத்தில் 61 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன என்றாலும், இவற்றில், 14 நாடுகளே தங்கள் நாட்டின் அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்துள்ளன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தற்போது உலகில் ஏறத்தாழ 14 ஆயிரம் அணு ஆயுதங்கள் உள்ளன என்றும், இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள், மேலும் அவற்றை நவீனமயமாக்கும் நீண்ட காலத் திட்டங்களைக் கொண்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று உலகில் பாதிக்கும் அதிகமான மக்கள், இத்தகைய அணு ஆயுதங்கள் உள்ள நாடுகளில் அல்லது, அணு கூட்டமைப்பு நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கப்பல் போக்குவரத்து துறையில் பெண்களின் மேம்பாடு என்ற தலைப்பில், செப்டம்பர் 26, இவ்வியாழனன்று, கப்பல்போக்குவரத்து உலக நாளும் கடைப்பிடிக்கப்பட்டது. (Agencies)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2019, 15:30