இந்தியாவின் உணவுப் பொருட்கள் விற்பனைக் கடை இந்தியாவின் உணவுப் பொருட்கள் விற்பனைக் கடை 

பூமியில் புதுமை : விளை நிலங்கள், வீட்டு மனைகளானால்.......

பூமியின் ஒவ்வொரு டிகிரி வெப்பம் உயரும் போதும் இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் 60 இலட்சம் டன் இழப்பு ஏற்படுவதாக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், 2006ம் ஆண்டு தேசிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ஆற்றிய உரையில், ‘2020ம் ஆண்டில் நம் நாட்டில் விவசாய உற்பத்திக்குரிய நிலப்பரப்பு குறைந்து, விவசாயம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். ஆனால் மக்கள்தொகை மிக அதிகமாக இருக்கும். எனவே, தற்போதைய உணவு உற்பத்தியைப்போல் இரண்டு மடங்கு அதிகரித்தாக வேண்டும். இல்லையேல் உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்’ என்று கூறிய கருத்து, நூற்றுக்கு நூறு உண்மையாகி வருகிறது.

2050ம் ஆண்டில் உணவுத் தேவை இப்போதைய அளவைக்காட்டிலும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படியொரு சூழலில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், நவீன நகரங்கள், விமான நிலையங்கள், அதிவிரைவு சாலைகள் என்ற பெயரில், நாடு முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 1 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள், வீட்டு மனைகளுக்கென விற்கப்படுகின்றனவாம். உலகிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில், விளைநிலங்களின் பரப்பளவு 100 மில்லியன் ஹெக்டேர். நமது நாட்டில் சாகுபடிக்கு ஏற்ற விளைநிலங்களின் பரப்பளவு 150 மில்லியன் ஹெக்டேர். ஆனால் விவசாய உற்பத்தியில் சீனாவைவிட நாம் பின்தங்கி இருக்கிறோம். இது தவிர, பூமியின் ஒவ்வொரு டிகிரி வெப்பம் உயரும் போதும் இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் 60 இலட்சம் டன் இழப்பு ஏற்படுவதாக டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இப்போது சொல்லுங்கள், நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரிதானா?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2019, 11:08