டெல்லியில் காற்று மாசுக்கேடு டெல்லியில் காற்று மாசுக்கேடு 

பூமியில் புதுமை : 2.5 பில்லியன் ஆண்டுகளும் 40 ஆண்டுகளும்

தார் பாலைவனத்தில் இருந்து கிளம்பும் புழுதிப் புயல், தடுப்பு இல்லாமல் இப்போது டெல்லி வரை வர காரணம் என்ன?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

டெல்லி மற்றும் வட இந்தியாவில் புழுதி அதிகம் இருப்பதை அங்கு சென்றவர்கள் பார்த்திருப்பார்கள். புழுதி மாசு அதிகம் உள்ள ஊர்களில், உலகளவில், வட இந்திய நகரங்கள் அதிகம். ஒவ்வோர் ஆண்டும் பஞ்சாபில் கோதுமை சாகுபடி செய்த பின் பயிர்களை எரிப்பது ஒரு காரணம்.

இன்னொரு காரணம் தெரியுமா?

ஆரவல்லி என்று ஒரு மலைத் தொடர், இரண்டரை பில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது. உலகத்தின் பழைமையான மலை தொடர்களில் ஒன்று இது. ஏறத்தாழ 700 கிலோமீட்டர், குஜராத்தில் இருந்து டெல்லி வரை, ராஜஸ்தான் ஹரியானா மாநிலங்கள் வழியாக வருகிறது. இந்த மலைத் தொடரில் இருந்த காடுகள், தார் பாலைவனம் பரவாமல் இருக்க உதவி செய்து வந்தன.

ஊர்கள் எல்லாப்பக்கமும் பரவுவது, கிரானைட் வெட்டி எடுப்பதற்காக மலைகளை அழிப்பது, காடுகளை அழிப்பது, புதிய சாலைகள், புதிய கட்டுமானத் திட்டங்கள் என்று பலவிதமாக, இரண்டரை பில்லியன் ஆண்டு இருந்த மலைத்தொடரை, 40 ஆண்டுகளில் எப்படி அழித்து உள்ளோம் என்பதை, செயற்கை கோள் உதவியுடன் எடுத்துள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.

தார் பாலைவனத்தில் இருந்து கிளம்பும் புழுதிப் புயல், இந்த அழிவின் காரணமாக, தடுப்பு இல்லாமல், இப்போது, டெல்லி வரை வர ஆரம்பித்துள்ளது.

போன ஆண்டும் இந்த ஆண்டும் புழுதிப் புயலின் வேகமும், நேரமும், அதிகம் இருந்தன. இவற்றால் முதியோர், சிறுவர்கள், எல்லாருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட உள்ளன. மனிதனின் பேராசை, மற்றும், எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஆகியவற்றின் விளைவு இது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2019, 16:11