ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட பயணம் குறித்து செய்திகள் - கோப்புப் படம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட பயணம் குறித்து செய்திகள் - கோப்புப் படம் 

அரபு அமீரகத்தில் 17 கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அனுமதியளிக்க...

பல்வேறு மதத்தவர் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதிலும், பல்வேறு மதப் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்துவதிலும், மிகவும் ஆர்வம் கொண்டிருந்த, மறைந்த Sheikh Zayed Bun Sultan Al Nahian அவர்களின் விருப்பத்திற்கிணங்க, வழிபாட்டுத்தலங்கள் எழுப்புவதற்கு அனுமதி வழங்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக, முஸ்லிம் அல்லாத, 19 வழிபாட்டுத்தலங்கள் உள்ளன என்றும், இவற்றை, அந்நாட்டுச் சட்டத்தின்படி அங்கீகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், பீதேஸ் செய்தி கூறுகின்றது.

இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த, அபு தாபி சமுதாய முன்னேற்றத் துறை இயக்குனர் சுல்தான் Alzaheri அவர்கள், அரசு அங்கீகாரம் அளிக்கவுள்ள 19 வழிபாட்டுத்தலங்களில், 17, கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும், சிற்றாலயங்கள் என அறிவித்தார்.

அமீரகத்தின் சட்டத்திற்கு உட்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும், இந்து சமுதாயத்திற்கு ஒன்றும், சீக்கிய சமுதாயத்திற்கு ஒன்றும் என, இரு வழிபாட்டுத்தலங்களும் அங்கீகரிப்படவுள்ளன என்றும், Alzaheri அவர்கள் தெரிவித்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2019, 15:19