முதல் உலகப் போர் நினைவு நிகழ்வு முதல் உலகப் போர் நினைவு நிகழ்வு 

இமயமாகும் இளமை : சமூக சீர்திருத்தவாதி மதுசூதன் தாசு

ஒடிசாவிலும் இந்தியாவிலும் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்த மதுசூதன் அவர்கள் பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 28ம் தேதி, ஒடிசாவில் வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒடிசாவின் முதல் பட்டதாரியும் வழக்கறிஞரும் ஆன உத்கல கவுரப் மதுசூதன் தாசு, ஒடிசாவின் கட்டக் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்யபாமாபூர் என்னும் கிராமத்தில் 1848 ஏப்ரல்  28  அன்று பிறந்தார்.

1870ம் ஆண்டு இளநிலை கலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்து ஒடிசாவின் முதல் பட்டதாரி ஆனார். தொடர்ந்து அவர் 1873ம் ஆண்டு முதுநிலை கலை மற்றும் 1878ம் ஆண்டு சட்ட இளங்கலை படிப்புகளையும் முடித்து இவற்றை சாதித்த முதல் ஒடிசா மாணவர் ஆனார். 1881ம் ஆண்டு வழக்கறிஞராய் தனது பணியைத் தொடங்கினார். ஒடிசாவிலும் இந்தியாவிலும் உள்ள வழக்கறிஞர்களுக்கு மதுசூதன் ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்தார். அவரது பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 28ம் தேதி, ஒடிசாவில் வழக்கறிஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  மக்களால் 'மது பாபு' என்று அன்போடு அழைக்கப்பட்ட மதுசூதன், ஒடிசா மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். ஒரு எழுத்தாளராகவும் கவிஞராகவும் மதுசூதனின் எழுத்துக்களில் நாட்டுப்பற்று மேலோங்கி இருந்தது.

மதுசூதன் 1934ம் ஆண்டு  பிப்ரவரி 4ம் தேதி  இயற்கை எய்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2018, 15:59