இந்திய கொடியுடன் இந்திய கொடியுடன்  

இமயமாகும் இளமை : தாய் மண்ணே வணக்கம் பாடலின் வரலாறு

துணை ஆட்சியாளர் பதிவியிலிருந்து விலகி, தேச விடுதலைக்காகப் பாடுபட்ட பக்கிம் சந்திர சாட்டர்ஜிதான் 'வந்தே மாதரம்' பாடலை எழுதியவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வங்காளத்தில், ஒரு மாவட்ட துணை ஆட்சியாளராக, பணியில் இருந்த பக்கிம் சந்திர சாட்டர்ஜி அவர்கள், தட்சிணேசுவரம் சென்று ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆசி பெற்றார். சாட்டர்ஜிக்கு ஆசி வழங்கிய பரமஹம்சர், 'உனது பெயர் என்ன?' என்று கேட்டார். 'என் பெயர் பக்கிம் சந்திரர் ' என்று பதிலளித்தார். வங்காள மொழியில் பக்கிம் என்றால் 'வளைந்த' என்று பொருள். வளைந்த சந்திரன். அதாவது 'பிறைச் சந்திரன்' என்று அர்த்தம். இதை கேட்ட பரமஹம்சர் சிரித்தபடி "நீ வளைந்த சந்திரனா! ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே நீ! ஆங்கிலேயன் பூட்ஸ் காலால் மிதித்ததில் வளைந்து போய்விட்டாயா?" என்று கேட்டார். பரமஹம்சரின் வார்த்தையைக் கேட்ட பக்கிம் சந்திரர் குறுகிப் போனார்; வருந்தினார். நேராக தம் வீடு வந்தவர், அந்நியரிடம் பணியாற்றுவது தனக்கு அவமானம் என உணர்ந்தார். உடனடியாகத் தமது துணை ஆட்சியாளர் பதிவியிலிருந்து விலகினார். பின்னர் தேச விடுதலைக்குப் பாடுபட்டார். அப்போது (1882) அவர் எழுதிய நூல்தான் 'ஆனந்தமடம்'.  அந்நூலில்தான் 'வந்தே மாதரம்' (தாய் மண்ணே வணக்கம்) பாடல் இடம் பெற்றுள்ளது.

விடுதலை பெருநெருப்பை மூட்டிய வந்தே மாதரத்திற்கு முதல் பொறி கொடுத்தவர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2018, 14:47