இலங்கை பள்ளி மாணவிகள் இலங்கை பள்ளி மாணவிகள் 

ஒப்புரவு, பள்ளிகளில் தொடங்குகின்றது

இலங்கை தேசிய ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவு அலுவலகம், மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதற்கு முயற்சி

மேரி தெரேசா – வத்திக்கான்

இலங்கையில், தேசிய அளவில், ஒப்புரவு மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு, கல்வி முக்கிய பங்காற்ற முடியும் என்று, அந்நாட்டின், தேசிய ஒன்றிப்பு மற்றும் ஒப்புரவு அலுவலகத்தின் கல்வித்துறையின் இயக்குனர் ஜே.கே.ராஜபக்ஷா அவர்கள் கூறியுள்ளார்.

“சகோதரப் பாடசாலை” என்ற தலைப்பில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமென, குருனெகாலா மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஐந்து நாள் பயிற்சி பாசறையில் உரையாற்றிய ஜே.கே.ராஜபக்ஷா அவர்கள், வருங்காலத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் முக்கிய  பங்கைக் கொண்டுள்ள இளையோர் மத்தியில் நல்லதோர் பரிமாற்றங்களைப் பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாணவர்கள், நல்லவர்களாகவோ, தீயவர்களாகவோ மாறுவது பள்ளியிலிருந்து தொடங்குகின்றது என்றுரைத்த ஜே.கே.ராஜபக்ஷா அவர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2018, 15:37