கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின் 

ஸ்லோவாக்கிய தலத்திருஅவையின் முப்பெரும் விழாக்கள்

ஸ்லோவாக்கிய ஆயர் பேரவை விடுத்த அழைப்பினை ஏற்று அந்நாட்டில் செப்டம்பர் 14 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வருகிறார் கர்தினால் பரோலின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஸ்லோவாக்கியா நாட்டில் இடம்பெறவுள்ள தலத்திருஅவையின் முப்பெரும் விழாக்களையொட்டி, அந்நாட்டில் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுவருகிறார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஸ்லோவாக்கியா குடியரசுக்கும் வத்திக்கானுக்கும் இடையே முழு அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு, புனிதர்கள் சிறில் மற்றும் மெத்தோடியஸ் அந்நாட்டிற்கு வந்ததன் 1160ஆம் ஆண்டு நிறைவு, இரு ஸ்லோவாக்கிய மறைசாட்சிகள் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டதன் 20ஆம் ஆண்டு நிறைவு ஆகிய விழாக்களை சிறப்பிக்கும் வேளையில், ஸ்லோவாக்கிய ஆயர் பேரவை விடுத்த அழைப்பினை ஏற்று அந்நாட்டில் செப்டம்பர் 14 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வருகிறார் கர்தினால் பரோலின்.

இவ்விழாக்கள் தவிர, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2021ஆம் ஆண்டில் செப்டம்பர் 12 முதல் 15 வரை ஸ்லோவாக்கியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொண்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவும் இடம்பெறுகிறது என்ற கர்தினால் பரோலின் அவர்கள்,  ஸ்லோவாக்கிய கத்தோலிக்கர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் ஒன்றிப்பை பலப்படுத்தவும், அமைதிக்காக இணைந்து செபிக்கவும் இப்பயணம் உதவும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்லோவாக்கியா நாடு, அளவில் சிறியதாக இருப்பினும் அதன் ஆன்மீக மதிப்பீடுகளின் உதவியுடன் உலகில் நல்மாற்றங்களுக்கு சிறப்புப் பங்காற்ற முடியும் என்ற ஆவலையும் வெளியிட்டார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2023, 12:50