உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான பணி ஆவணத்திற்கு ஒப்புதல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
16-வது உலக ஆயர்கள் மாமன்றத் தலமைச் செயலகத்தின் சாதாரண அவை, ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பிலான உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்விற்கான ஆவணப் பணிகள் (Instrumentum laboris') மற்றும் பேரவையின் செயல்முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது
இறைவேண்டல் மற்றும் தனிப்பட்ட பிரதிபலிப்புகளின் வழியாக "மிகுந்த சகோதரத்துவத்தின் சூழ்நிலையில்", உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆவணப் பணிகள் பற்றி விவாதிக்க ஆயர் மாமன்றத் தலைமைச் செயலகத்தின் சாதாரண அவை இந்த வாரம் உரோமையில் கூடிய வேளை, இவ்வொப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்படவிருக்கும் இந்த ஆவணம், அக்டோபரில் நடைபெறும் பொதுப் பேரவையின் முதல் கூட்டத்தில் விவாதங்களுக்கு வழிகாட்டும் என்றும், அடுத்த ஆண்டு அதன் விவாதத்தின் இரண்டாம் பகுதிக்காக இப்பேரவை மீண்டும் ஒன்றுகூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, அவையின் உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசகர்களுடன் இணைந்து ஆவணப் பணிகள் மற்றும் வரவிருக்கும் உலக ஆயர்கள் மான்றத்திற்கான வழிமுறைகளை மதிப்பாய்வு செய்து, திருத்தி, இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்