கடத்தப்பட்ட பிள்ளைகளுக்காக சூடான் பெண்கள் கடத்தப்பட்ட பிள்ளைகளுக்காக சூடான் பெண்கள் 

பாலியல் கொடுமை, எல்லாக் காலங்களிலும் தடைசெய்யப்பட

வருங்காலத்தின் முக்கியத்துவத்தில் மிகுந்த கவனம் செலுத்தினால், வருங்கால அமைதி பற்றி கனவு கண்டால், அமைதிகாக்கும் பணிகளில் பெண்களுக்கு அதிக இடம் அளிக்கப்பட வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

‘பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு’ என்பது பற்றி, ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அமைதி மற்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளில், பெண்களின் குரல்கள் கேட்கப்படுவது, பல இடங்களில் அதிகரித்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், முக்கியத்துவம் நிறைந்த அமைதி மற்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளில், பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று கூறினார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும், அமைதி பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2020ம் ஆண்டில், இருபது ஆண்டுகள் நிறைவுறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய, பேராயர் அவுசா அவர்கள், போர்ச் சூழல்களில் வன்முறை இடம்பெறுவதற்குக் காரணமாகாத பெண்களே, அப்போரின் எதிர்மறை விளைவுகளுக்கு முதலில் பலியாகின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

போர்ச்சூழல்களில், போரின் ஆயுதமாக, பெண்களும் சிறுமிகளும் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமை பற்றி, அடிக்கடி நம் கவனம் செல்கின்றது, ஆயினும், எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும், இத்தகைய கடுமையான குற்றங்கள் வன்மையாய்க் கண்டிக்கப்பட வேண்டும், அவை இடம்பெறாதபடி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மற்றும், அக்குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார், பேராயர் அவுசா. 

கடந்த பத்து ஆண்டுகளாக, மனித வர்த்தகத்திற்கெதிராய் உழைத்துவரும், தலித்தா கும் என்ற உலகளாவிய கத்தோலிக்க அருள்சகோதரிகள் அமைப்பு, இதற்குப் பலியான 15 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களுக்கு உதவியுள்ளது, மற்றும், விழிப்புணர்வு நடவடிக்கை வழியாக, ஏறத்தாழ 2 இலட்சம் பெண்கள், இதற்குப் பலியாகாமல் பாதுகாத்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2019, 14:59