ரோபோ கால்பந்து வீரர்கள் ரோபோ கால்பந்து வீரர்கள் 

ரோபோ தொழில்நுட்பங்கள் பற்றிய வத்திக்கான் கருத்தரங்கு

வளர்ந்துவரும் ரோபோ தொழில்நுட்பங்கள், மருத்துவம் மற்றும் நலவாழ்வு, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, உற்பத்தி, வேளாண்மை மற்றும் ஆயுதம் தாங்கிய போர்கள் போன்றவைகளில், தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவை எத்தகைய சூழல்களிலும் அறிவிப்பதற்கு, தூய ஆவியார் நம்மில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மே 17, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “கிறிஸ்துவை எல்லாச் சூழல்களிலும் வழங்குவதற்கும், நற்செய்தியின் மகிழ்வு மற்றும் இளமைப்பொலிவிற்குச் சான்று பகர்வதற்குமென, தூய ஆவியாரால் மாற்றம் அடைந்து, புதுப்பிக்கப்படுவதற்கு, உங்களை அனுமதியுங்கள்!” என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.

மேலும், "ரோபோ தொழில்நுட்பங்கள் (AI), செயற்கை அறிவு, மற்றும் மனித சமுதாயம் : அறிவியல், நன்னெறிகள் மற்றும் கொள்கைகள்" என்ற தலைப்பில், இரு வத்திக்கான் கழகங்கள் இணைந்து இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளன.

பாப்பிறை சமூக அறிவியல் கழகமும், பாப்பிறை அறிவியல் கழகமும் இணைந்து, வத்திக்கானில், மே 16, இவ்வியாழன், மே 17, இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில், இக்கருத்தரங்கை நடத்தின.

மனித சமுதாயத்தின் மீது, ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும், செயற்கை அறிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து, இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2019, 15:34