நற்செய்தியின் மகிழ்ச்சி என்பது சீடத்துவத்தின் இயக்கத்தைத் தூண்டுகிறது!
நற்செய்தியின் மகிழ்ச்சி என்பது, இறைவனைச் சந்திக்கவும், வாழ்க்கையின் முழுமையை அனுபவிக்கவும் குறிப்பிட்டதொரு பாதையில் நம்மை நடத்துகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நற்செய்தியின் மகிழ்ச்சி என்பது, உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, அது சீடத்துவத்தின் இயக்கத்தை நம்மில் தூண்டுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்ரல் 29, இத்திங்களன்று, தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில், இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்ச்சி என்பது, நம்மில் உண்மையானதொரு வெளியேற்றத்தைத் தூண்டி, இறைவனைச் சந்திக்கவும், வாழ்க்கையின் முழுமையை அனுபவிக்கவும் குறிப்பிட்டதொரு பாதையில் நம்மை நடத்துகிறது என்றும் விளக்கியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
29 April 2024, 15:28