திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி உடன் (கோப்புப்படம் 2023 மே 13) திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி உடன் (கோப்புப்படம் 2023 மே 13)  

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் இரஷ்யா-உக்ரைனில் அமைதி ஏற்படும்

புலம்பெயர்வது என்பது மிகவும் கொடுமையானது. எவ்வளவு செல்வம் உடையவராக இருந்தாலும் பிறரால் வரவேற்கப்படாவிட்டால் மிகவும் மோசமாக நிலைக்கு ஆளாகின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இரஷ்யா மற்றும் உக்ரைன் தங்களுக்கிடையே தாங்களாகவோ அல்லது பிறர் வழியாகவோ ஒருவர் மற்றவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்பொழுது விரைவில் அமைதி உண்டாகும் என்றுக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 25 வியாழனன்று இஸ்பானிய மொழி அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான Telemundo விற்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் அரசுத்தலைவருடன் சந்திப்பு, புலம்பெயர்ந்தோர், கருக்கலைப்பு, அருள்பணித்துவம், தனது உடல்நலம், செபம் போன்றவற்றைப் பற்றிய தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்யா உக்ரைன் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அமைதி நிச்சயம் உண்டாகும் என்று தான் அச்சந்திப்பில் தான் வலியுறுத்தியதையும், புலம்பெயர்ந்த சிறாரைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று தான் கேட்டுக்கொண்டதையும் எடுத்துரைத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி மாதம் தான் மேற்கொண்ட தென்சூடான் பயணம் பற்றியும் அங்குள்ள மக்களின் நிலைபற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதம் ஏந்திய அற்புதமான மனிதர்கள் பக்கம் தன் எண்ணங்கள் திரும்புகின்றன என்றும், வெளிநாட்டு சக்திகள் தங்கள் தொழில்களை நாட்டை வளரச் செய்வதற்கன்றி, வளங்களை எடுத்துச்செல்வதற்காகவே தொடங்கின என்றும், இதனாலேயே அதிகமான இடப்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

புலம்பெயர்வது என்பது மிகவும் கொடுமையானது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வளவு செல்வம் உடையவராக இருந்தாலும் பிறரால் வரவேற்கப்படாவிட்டால் மிகவும் மோசமாக நிலைக்கு ஆளாகின்றார் என்றும் கருக்கலைப்பு என்பது ஒரு பிரச்சனைக்கு ஓர் உயிரைக் கொல்வது ஈடாகாது தீர்வாகாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனது உடல் நலம், வத்திகான் சீர்திருத்தங்கள், பொருளாதார அமைப்பு, புதிய சட்டங்கள், மேய்ப்புப்பணிகள், வத்திக்கானில் பெண்களின் பங்கு, ஆகியவை பற்றியக் கருத்துக்களையும் எடுத்துரைத்துள்ள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 13:34