காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தீர்ப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நமது காலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடி இரண்டும் தனித்தனி நெருக்கடிகள் அல்ல, ஆனால் அவைகள் இரண்டுமே ஒன்று என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 20, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் Greater Manchester-லிருந்த வந்த பல்மதத் தலைவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிச்சயமாக, இது புதிய மற்றும் தொலைநோக்குப் பொருளாதார மாதிரிகளை உருவாக்க வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது என்றும் உரைத்தார்.
மத மற்றும் அரசியல் தலைவர்களாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தீர்க்க உறுதியுடன் செயல்படவும் அவர்கள் எடுத்துவரும் நல்முயற்சிகளுக்காக அவர்களைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் படைப்பைப் பாதுகாப்பதற்கான நமது தற்போதைய அர்ப்பணிப்பு என்பது, ஒவ்வொரு மனிதரின் மாண்பு மற்றும் மதிப்பு இரண்டையும் மதிக்கும் மற்றும் ஏழைகளின் வாழ்வில் நிகழும் சுற்றுச்சூழல் சீரழிவின் துயர விளைவுகளை ஒப்புக் கொள்ளும் ஒரு ஒருங்கிணைந்த சூழலியலை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என்றும் விளக்கினார் திருத்தந்தை.
இன்றைய நுகர்வோர் மற்றும் பொது நன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த மனித மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தடுக்கும் உலகளாவிய அலட்சியத்தால் உருவாக்கப்படும் கழிவுகளின் "எறியும்" கலாச்சாரத்தை முறியடிக்க ஒரு உறுதிப்பாடு தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தத்தை.
நம்பிக்கை கொண்டவர்களாக, இளைஞர்களின் மனதையும் இதயத்தையும் உருவாக்குவதற்கும், அவர்களின் போக்கை மாற்றுவதற்கான அவர்களின் கோரிக்கையை உறுதிப்படுத்துவதற்கும், நிலையான மற்றும் ஒருங்கிணைந்த மனிதரை இலக்காகக் கொண்ட தொலைநோக்குக் கொள்கைகளுக்கும் உங்கள் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் அவசியத் தேவையாக உள்ளன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்