புனித பூமி செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ள திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
எருசலேமில் இருந்து செயல்படும் 'புனித பூமி' தகவல் வெளியீட்டு மையத்தின் சமூகத் தொடர்பாளர்களை ஜனவரி 17, திங்களன்று திருப்பீடத்தில் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மத்திய கிழக்குப் பகுதியின் வரலாறு, தற்கால நடவடிக்கைகள் ஆகியவைக் குறித்து தகவல்கள் வழங்கி வரும் ‘புனித பூமி’ பத்திரிகை துவங்கப்பட்டதன் நூறாமாண்டை ஒட்டி. அம்மையத்தின் கீழ்ப் பணியாற்றும் 50 சமூகத் தொடர்பாளர்கள் திருத்தந்தையை ஜனவரி 17, திங்களன்று சந்திக்க உள்ளனர்.
புனித பூமிக்குப் பொறுப்பாளராகச் செயல்படும் பிரான்சிஸ்கன் துறவு சபையின் அருள்பணி Fra Francesco Patton அவர்களின் தலைமையில் திருத்தந்தையை சந்திக்கவுள்ள குழுவில், புனித பூமி தகவல் தொடர்பு மையத்தின் நிர்வாகிகள், செய்தியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பல நாடுகளின் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருப்பர்.
1921ம் ஆண்டு எருசலேமில் துவக்கப்பட்ட ‘புனித பூமி’ என்ற பத்திரிகை, தற்போது மாதத்திற்கு இருமுறை, இத்தாலியம், ஆங்கிலம், பிரஞ்ச், போர்த்துக்கீசியம், இஸ்பானியம், அரேபியம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்