புதன் மறைக்கல்வி உரை (201021) புதன் மறைக்கல்வி உரை (201021) 

நற்செய்தி அறிவிப்புப்பணி, நம்பிக்கையை வளர்க்கிறது

நற்செய்தியை அறிவிக்கும்போது, கடவுள் எல்லாவற்றிலும் பிரசன்னமாய் இருக்கிறார், மற்றும், அவரது உடனிருப்பு இருக்கின்றது என்பதை, அது நமக்கு நினைவுபடுத்துகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புதிய வழியில் நற்செய்தியை அறிவிப்பதற்குத் தேவையான துணிவு மற்றும், படைப்பாற்றல்திறனை, எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்கின்ற கடவுள் நமக்கு அளிக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

நற்செய்தியை அறிவிக்கும்போது, கடவுள் எல்லாவற்றிலும் பிரசன்னமாய் இருக்கிறார், மற்றும், அவரது உடனிருப்பு இருக்கின்றது என்பதை, அது நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும், இதனால் நற்செய்தி அறிவிப்புப்பணி, நம்பிக்கையை புத்துயிர்பெறச் செய்கிறது என்றும், திருத்தந்தை மேலும் கூறியுள்ளார்.

அக்டோபர் 24, இஞ்ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் 95வது உலக மறைபரப்புப்பணி நாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 23, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், நற்செய்தி (#Gospel) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இச்சனிக்கிழமை சந்திப்புக்கள்

மேலும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, கொலம்பியா நாட்டு உதவி அரசுத்தலைவர் மற்றும், வெளியுறவு அமைச்சருமான Marta Lucía Ramírez, பிரேசில் நாட்டு Aparecidaவின் முன்னாள் பேராயர் கர்தினால் Raymundo Damasceno Assis, பெரு நாட்டு லீமா பேராயர் Carlos Gustavo Castillo Mattasoglio ஆகியோரும், அக்டோபர் 23, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2021, 15:30