செபிக்கும் திருத்தந்தை செபிக்கும் திருத்தந்தை 

அசாதாரண நிகழ்வுகளின் வழி இறைவன் வருவதில்லை

இறை விருப்பத்தை நிறைவேற்ற நாம் நிகழ்த்தும் சிறு செயல்கள் வழியே, தன்னை வெளிப்படுத்துகிறார் இறைவன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அசாதாரண நிகழ்வுகளில் இறைவன் தோன்றுவார் என மனிதன் எதிர்பார்த்திருக்க, அவரோ, இறை விருப்பத்தை நிறைவேற்ற நாம் நிகழ்த்தும் சிறு செயல்கள் வழி தன்னை வெளிப்படுத்துகிறார் என்ற கருத்துடன், டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இறைவன் நம் வாழ்வின் அசாதாரண நிகழ்வுகளில் வருவதில்லை, மாறாக, சிறு விடயங்களிலும், விடாமுயற்சியுடனும், பணிவுடனும் செயலாற்றி இறைவிருப்பத்தை நிறைவேற்ற முயலும் பாதையில், நம் தினசரி வாழ்வின் வெளிப்படையான சலிப்பூட்டும் பணிகளிலும், நம் நடவடிக்கைகளின் மந்தமான வேளைகளிலும், இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறர்' என்கிறது திருத்தந்தை, ஆகஸ்ட் 10ம் தேதி, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி.

ஆகஸ்ட் 10, இச்செவ்வாய்க்கிழமை முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,355 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன், அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2021, 14:50