பெரு நாட்டில் நீதிக்காக குரல்கொடுத்தவர்கள் நினைவிடம் பெரு நாட்டில் நீதிக்காக குரல்கொடுத்தவர்கள் நினைவிடம் 

மறைசாட்சி, ஆறு இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு ஏற்பு

பெரு நாட்டைச் சேர்ந்த நல்ல மேய்ப்பரின் பிறரன்பு அன்னை துறவு சபையைச் சார்ந்த அருள்சகோதரி Maria Agostina Rivas López அவர்கள், 1990ம் ஆண்டில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனிதர், மற்றும், அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், மே 22, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, மறைசாட்சி ஒருவர், மற்றும், ஆறு இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களை சமர்ப்பித்தார்.

நல்ல மேய்ப்பரின் பிறரன்பு அன்னை துறவு சபையைச் சார்ந்த அருள்சகோதரி Maria Agostina Rivas López அவர்கள், 1920ம் ஆண்டில் பெரு நாட்டின் Coracoraவில் பிறந்தார். இவர், 1990ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, அந்நாட்டின் La Florida நகரில், மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

ஆறு இறைஊழியர்கள்

இத்தாலியின் செவெரோவில், 1880ம் ஆண்டு பிறந்து, 1977ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த மறைமாவட்ட அருள்பணி Felice Canelli;

போலந்து நாட்டின் Mławaவில், 1915ம் ஆண்டு பிறந்து 1945ம் ஆண்டு, இறைபதம் சேர்ந்த, இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் சபையின் அருள்பணி Bernardo della Madre del Bell’Amore;

இஸ்பெயின் நாட்டின் Puente la Reinaவில், 1899ம் ஆண்டு பிறந்து, 1989ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த, அகுஸ்தீன் துறவு சபையின் அருள்பணி Mariano Gazpio Ezcurra;

இத்தாலியின் Marcianise 1914ம் ஆண்டு பிறந்து, 1969ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த, “Marcianise” கார்மேல் ஆழ்நிலை துறவு இல்லத் தலைவராகப் பணியாற்றிய அருள்சகோதரி Colomba di Gesù Ostia;

இத்தாலியின் Bresciaவில், 1897ம் ஆண்டு பிறந்து, 1962ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த, பிரான்சிஸ் சிறிய குடும்பத்தின் மூன்றாம் சபையைச் சார்ந்த Antonia Lesino;

தற்போதைய ஹங்கேரி நாட்டில், 1904ம் ஆண்டு பிறந்து, 1980ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த, குடும்பத்தின் தந்தையான Alessandro Bálint, ஆகிய ஆறு இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வுமுறைகளை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2021, 16:02