உரோம் நகருக்கு நலமளி்ககும் அன்னை மரியாவிடம் செபிக்கின்றார் திருத்தந்தை உரோம் நகருக்கு நலமளி்ககும் அன்னை மரியாவிடம் செபிக்கின்றார் திருத்தந்தை 

திருத்தந்தையோடு இணைந்து செபமாலை செபிக்கும் முறை

மே 30, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் தோட்டத்திலுள்ள லூர்து அன்னை கெபியில் நடைபெறும் செபமாலை பக்திமுயற்சி, வத்திக்கான் செய்தித்துறையின் யூடியூப், மற்றும், முகநூல் வழியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 31, வருகிற ஞாயிறன்று திருஅவையில், தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா சிறப்பிக்கப்படுவதையொட்டி, அவர் நம்மில் இறங்கிவந்து நமக்கு உதவுமாறு மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29, இவெவள்ளியன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

எந்த இடத்திற்குச் செல்வதற்காகப் பிறந்தோமோ, அந்த வியப்புக்குரிய இடத்திற்கு நாம் பயணம் மேற்கொள்ளச் செய்பவர், தூய ஆவியார். இவர், உயிருள்ள நம்பிக்கையால் நமக்கு ஊட்டமளிக்கிறார். எனவே, அவர் நம்மிடம் வருமாறு அழைப்போம், மற்றும், அவர் நம்மை, தமக்கு அருகில் வைத்துக் கொள்கிறார் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

மேலும், உலகை தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட்-19 கொள்ளைநோய் முற்றிலும் ஒழிவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 30, இச்சனிக்கிழமை மாலையில் தலைமையேற்று நிறைவேற்றும் செபமாலை பக்திமுயற்சியில் பங்குபெறும் வழிமுறைகளை வழங்கியுள்ளது, வத்திக்கான் செய்தித்துறை.

மே 30, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 5.30 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு 9 மணிக்கு, வத்திக்கான் தோட்டத்திலுள்ள லூர்து அன்னை கெபியில் நடைபெறும் இந்த பக்திமுயற்சி, வத்திக்கான் செய்தித்துறையின் யூடியூப், மற்றும், முகநூல் வழியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வத்திக்கானில் திருத்தந்தை செபிக்கும் அதேநேரத்தில், உலகின் அன்னை மரியா திருத்தலங்களில் மக்கள் கூடியிருந்து, திருத்தந்தையோடு இணைந்து செபிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் நூலகம், அப்போஸ்தலிக்க ஆவண காப்பகம்

வத்திக்கான் நூலகமும், அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகமும், ஜூன் 1, வருகிற திங்களன்று, ஆய்வாளர்களுக்குத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 சமுதாய விலகல் விதிமுறை காரணமாக, 12 வாரங்களாக மூடப்பட்டிருந்த இவ்விரு இடங்களும், மீண்டும் திறக்கப்படும் எனவும், அங்கு செல்ல விரும்பும் ஆய்வாளர்கள், இணையதளம் வழியாக முன்பதிவு செய்யவேண்டும் மற்றும், கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகம், ஆய்வாளர்களுக்கென நான்கு வாரங்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும், அதற்குப்பின், கோடை விடுமுறைக்காக, ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணக் காப்பகம், அடுத்த அறிவிப்பு வரும்வரை, காலை நேரத்தில் மட்டுமே திறந்து வைக்கப்படும் மற்றும், அங்கு செல்வதற்கு ஒரே நேரத்தில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும், அந்த காப்பகத்தின் இணைய பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2020, 13:44