பொதுவாக வரும் சளியின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் (26.02.2020) பொதுவாக வரும் சளியின் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் (26.02.2020) 

திருத்தந்தைக்கு வந்திருப்பது, சாதாரண உடல்நலக் குறைவு

நம் அனைவருக்கும் பொதுவாக வரும் சளியின் தொல்லையால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ளார், வேறு எந்தவிதமான நோய்க்கிருமியும் அவரைத் தாக்கவில்லை.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் அனைவருக்கும் பொதுவாக வரும் சளியின் தொல்லையால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அதைப் போக்குவற்குத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுவருகிறார் என்றும், வத்திக்கான் செய்தித்துறைத் தலைவர், மத்தேயோ புரூனி (Matteo Bruni) அவர்கள், மார்ச் 3, இச்செவ்வாய் மாலை செய்தியாளர்களிடம் கூறினார்.

திருத்தந்தைக்கு வேறு எந்தவிதமான நோய்க்கிருமியும் தாக்கவில்லை என்பதையும், அவர் தனது ஒவ்வொருநாள் திருப்பலியையும் ஆற்றிவருவதோடு, திருப்பீட உயர் அதிகாரிகள் பங்கேற்றுவரும் தியானத்தில் வழங்கப்படும் உரைகளை, சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்தே பின்பற்றி வருகிறார் என்பதையும் புரூனி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

பிப்ரவரி 26ம் தேதி சிறப்பிக்கப்பட்ட திருநீற்று புதனன்று, தன் வழக்கமான புதன் மறைக்கல்வி உரையை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலை புனித சபீனா பெருங்கோவிலில் திருநீற்றுப் புதன் திருப்பலியையும் நிறைவேற்றினார்.

பிப்ரவரி 27, வியாழன் முதல், திருத்தந்தை பங்கேற்கவிருந்த நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவில்லையெனினும், அவர் தயார் செய்திருந்த உரைகள், வெவ்வேறு குழுவினருக்கு வாசித்தளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வோர் ஆண்டும் நிகழ்வதுபோல், இவ்வாண்டும், ஆண்டு தியான வாரத்தில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2020, 14:55