திருத்தந்தை பாரி நகருக்கு சென்றபோது.....(கோப்பு படம்) திருத்தந்தை பாரி நகருக்கு சென்றபோது.....(கோப்பு படம்) 

கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்காக செபம்

தவக்காலம், உதவிசெய்வதற்கு யாருமின்றி துன்புறும் மக்களின் வேதனை பற்றித் தியானிப்பதற்கு ஏற்ற காலம்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சைககள் வழங்கும் நலவாழ்வுப் பணியாளர்களுக்காக, இவ்வெள்ளியன்று, மீண்டும் இறைவேண்டல் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 06, இவ்வெள்ளியன்று, #coronavirus என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்குச் சிகிச்சைககள் வழங்கும் நலவாழ்வுப் பணியாளர்கள், மற்றும், அக்கிருமி பரவாமல் தடுப்பதற்கு முயற்சித்துவரும் அரசு அதிகாரிகள், அந்நோயாளிகளுக்கு உதவுவோர் ஆகிய எல்லாருடனும் எனது அருகாமையைத் தெரிவிக்கிறேன் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இவ்வெள்ளியன்று #Lent என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள மற்றுமொரு டுவிட்டர் செய்தியில், உதவிசெய்வதற்கு யாருமின்றி துன்புறும் மக்களின் வேதனை பற்றித் தியானிப்பதற்கு நம்மை அனுமதிக்க, தவக்காலம் ஏற்ற காலம். அந்நோயாளிகள் மீதுள்ள பரிவன்பை, ஒருமைப்பாடு மற்றும், பராமரிப்பு எனும் தெளிவான செயல்களில், நம்மை ஈடுபடுத்துவதற்கும் தவக்காலம் தகுந்தது என்ற சொற்கள் வெளியாயின.

மேலும், கொரோனா தொற்றுக்கிருமி பரவாமல் தடுப்பதற்கு இத்தாலிய அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்  விதமாக, வரும் நாள்களில் திருத்தந்தை, திருப்பீடம் மற்றும், வத்திக்கான் நாட்டின் நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்று, திருப்பீட தகவல் தொடர்பக இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2020, 14:44