கிறிஸ்தவ ஒன்றிப்பு செபக்கூட்டத்தில் திருத்தந்தை (உரோம், 18.01.2019) கிறிஸ்தவ ஒன்றிப்பு செபக்கூட்டத்தில் திருத்தந்தை (உரோம், 18.01.2019) 

கிறிஸ்தவ ஒன்றிப்பு விருந்தோம்பல் – டுவிட்டர் செய்திகள்

"விருந்தோம்பல், நமது வாழ்வு முறையாக அமைவது, குறிப்பாக, வாழ்வில் மிகவும் நலிந்தோருக்கு வரவேற்பளிக்க நாம் முயல்வது, நம்மை, இன்னும் சிறந்த மனிதர்களாக, சீடர்களாக, உருவாக்கும்" – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி முடிய நடைபெற்றுவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையும், இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் மையமாக அமைந்துள்ள விருந்தோம்பல் என்ற கருத்தையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 23, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"ஏனைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கை கதைகளுக்கும், அவர்களது குழுமத்தின் வரலாற்றுக்கும் தனி கவனம் செலுத்தி, அவர்களுக்கு மனமுவந்து செவிமடுப்பது, கிறிஸ்தவ ஒன்றிப்பு விருந்தோம்பலுக்கு தேவையான பண்பு" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இதே கருத்துக்களை, சனவரி 22, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையிலும் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், இரு டுவிட்டர் செய்திகளை #GeneralAudience என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டார்.

"இவ்வாண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கு, விருந்தோம்பல், மையக்கருத்தாக அமைந்துள்ளது" என்ற சொற்கள், இப்புதனன்று, திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

"விருந்தோம்பல், நமது வாழ்வு முறையாக அமைவது, குறிப்பாக, வாழ்வில் மிகவும் நலிந்தோருக்கு வரவேற்பளிக்க நாம் முயல்வது, நம்மை இன்னும் சிறந்த மனிதர்களாக, இன்னும் சிறந்த சீடர்களாக, இன்னும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ மக்களாக உருவாக்கும்" என்ற சொற்களை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 January 2020, 14:42