திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

உச்சகட்ட நோக்கம் என்பது, இயேசுவை சந்திப்பதாகும்

இயேசுவுடன் நாம் மேற்கொள்ளும் சந்திப்பே நம்மை மீட்கமுடியும், மற்றும், நம் வாழ்வை முழுமையானதாகவும், அழகானதாகவும் மாற்றமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் கொண்டிருக்கும் திறமைகளையும் ஆற்றலையும் கண்டுகொண்டு, அவற்றை மற்றவர்களின் சேவைக்கென பயன்படுத்தும் சவாலை கைக்கொள்வதற்குரிய அழைப்பை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார் என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக இருந்தது.

மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து ஞாயிறன்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நம் உச்சகட்ட நோக்கம் என்பது, இயேசுவை சந்திப்பதாகும் என்பதை இந்நாளின் நற்செய்தி நமக்குச் சொல்லித் தருகின்றது. அவரே நம்மை தீமைகளிலிருந்து விடுவித்து நம் இதயங்களைக் குணப்படுத்துகிறார். அவருடன் நாம் மேற்கொள்ளும் சந்திப்பே நம்மை மீட்க முடியும், மற்றும், நம் வாழ்வை முழுமையானதாகவும், அழகானதாகவும் மாற்றமுடியும்', என அதில் கூறியுள்ளார்.

இஞ்ஞாயிறன்று 5 அருளாளர்கள், புனிதர்களாக அறிவிக்கப்பட்டதையொட்டியும் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இந்த புதிய புனிதர்களுக்காக இறைவனுக்கு  நன்றி கூறுவோம். விசுவாசத்தின் பாதையில் நடந்த இவர்களின் பரிந்துரையை நாடுவோம்' என அதில் கூறியுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2019, 15:34