திருத்தந்தையின் மூவேளை செப உரை 010919 திருத்தந்தையின் மூவேளை செப உரை 010919 

முதலிடங்களைத் தேடுவது, சமுதாயத்தைக் காயப்படுத்துகிறது

முதலிடங்கள் என்பவை, நாம் தேடிச்செல்பவைகளாக இராமல், அவை, நம்மைத் தேடி வருபவைகளாக, அதாவது, பிறர் நமக்கு வழங்குபவைகளாக இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தாழ்ச்சி என்ற பண்பை நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார்.

பரிசேயர் ஒருவருடைய வீட்டில், விருந்துக்குச் சென்ற இயேசு, அங்கு பலர் விருந்தில் முக்கிய இடங்களைத் தேடியதைக் கண்டு, இரண்டு அறிவுரைகளை, உவமைகள் வழியே தந்ததைக் கூறும் நற்செய்தியை மையப்படுத்தி, திருத்தந்தை தன் மூவேளை செப உரையை வழங்கினார்.

முதலிடங்களைத் தேடிச் செல்வது, சமுதாயத்தைக் காயப்படுத்துகிறது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகையைச் செயல், உடன்பிறந்த உணர்வுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்று எச்சரிக்கை விடுத்தார்.

முதலிடங்கள் என்பவை, நாம் தேடிச்செல்பவைகளாக இராமல், அவை, நம்மைத் தேடி வருபவைகளாக, அதாவது, பிறர் நமக்கு வழங்குபவைகளாக இருக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

மேலும், பிரதிபலன் வேண்டும் என்று எண்ணாமல், வறியோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரை இயேசு விருந்துக்கு அழைக்கவேண்டும் என்று இந்த ஞாயிறு நற்செய்தியில் கூறியதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கு நினைவுறுத்தினார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2019, 13:00