வத்திக்கான் வங்கி வத்திக்கான் வங்கி  

வத்திக்கான் வங்கியின் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அனுமதி

IOR எனப்படும் சமயப் பணிகளுக்கான அமைப்பை, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1942ம் ஆண்டில் உருவாக்கினார். 1990ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இதன் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் வங்கி என பொதுவாக அறியப்படும், வத்திக்கானின் சமயப் பணிகளுக்கான அமைப்பில் (IOR) புதுப்பிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 10, இச்சனிக்கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

வத்திக்கான் வங்கியின் கணக்குகளையும், பிற பணிகளையும் தணிக்கை செய்து, அதன் நிதி அறிக்கையை பாரபட்சமின்றி மதிப்பீடு செய்யும் தணிக்கையாளர் நியமனம், வங்கியின் நிர்வாகம், பணியாளர்கள் உள்ளிட்ட, புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு திருத்தந்தை அனுமதியளித்துள்ளார்.

வத்திக்கான் வங்கியின் ஆரம்பகட்ட விதிமுறைகளில் குறிக்கப்பட்டுள்ள, அந்த வங்கி தொடங்கப்படுவதற்கான நோக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், வெளியேயிருந்து சேர்க்கப்படும் தணிக்கையாளரின் முக்கியமான பணி, இந்த புதிய விதிமுறைகளில் முக்கியமாக இடம்பெற்றுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தணிக்கையாளர், ஒரு மனிதராகவோ அல்லது ஒரு நிறுவனமாகவோ இருக்கலாம் என்றும், வத்திக்கான் வங்கியின் நிர்வாக குழுவில், அவ்வங்கியின் மூன்று தணிக்கையாளர்கள் இடம்பெற மாட்டார்கள் என்றும், கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் வங்கியின் உள்அமைப்பிலுள்ள எண்ணிக்கை, ஐந்திலிருந்து நான்காகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் ஐந்து கர்தினால்கள் கொண்ட அவை, ஐந்து ஆண்டு காலத்திற்குச் செயல்படும், இந்த அவை, முன்பிருந்ததுபோல் காலவரையன்றி என இல்லாமல், ஒரேயொருமுறை மட்டும் உறுதிசெய்யப்படும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

IOR எனப்படும் சமயப் பணிகளுக்கான அமைப்பை, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1942ம் ஆண்டில் உருவாக்கினார். காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு, இந்த வங்கியை அமைக்கும் நோக்கத்தில், 1990ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இதன் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2019, 15:49