செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு விழாவில் திருத்தந்தை செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு விழாவில் திருத்தந்தை 

இயேசுவின் தூய்மைமிகு இதயம் விழாவையொட்டிய டுவிட்டர்கள்

இன்று, செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றோம், உலகில் இரக்கம்நிறை மறைப்பணியில் ஒன்றிணைந்து நுழைவதற்காக, என்னோடு சேர்ந்து செபியுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 28, இவ்வெள்ளியன்று, சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் தூய்மைமிகு இதயம் திருவிழா, இத்திருவிழாவன்று சிறப்பிக்கப்பட்ட அருள்பணியாளர் புனிதமடையும் நாள், உலகளாவிய செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவு ஆகிய மூன்றையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘ஹாஷ்டாக்’குகளுடன் ஜூன் 28, இவ்வெள்ளியன்று மூன்று டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்திருந்தார்

“இயேசு நம்மை நோக்குகிறார், நம்மை அன்புகூர்கிறார் மற்றும், நமக்காகக் காத்திருக்கிறார். அவர், அனைத்து இதயம் மற்றும் அனைத்து இரக்கம். நம்பிக்கையுடன் இயேசுவிடம் செல்வோம். அவர் எப்போதும் நம்மை மன்னிக்கிறார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் ஹாஸ்டாக் (#SacredHeartofJesus) டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.   

மேலும், அருள்பணியாளர் புனிதமடையும் நாளையொட்டி ‘ஹாஷ்டாக்’குடன்,  (#SanctificationOfPriests) தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கிறிஸ்து ஒவ்வொரு மனிதர் மீதும் கொண்டிருக்கும் அன்பில் ஆழம்கொண்டதாக, அனைத்து மேய்ப்புப்பணியும் அமைய வேண்டும் என, அனைத்து அருள்பணியாளர்களுக்காவும், எனது பாப்பிறை மறைப்பணிக்காகவும் செபியுங்கள்” என்று கூறியுள்ளார்.

செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு

“இன்று, செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் 175வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கின்றோம், இயேசுவின் தூய்மைமிகு இதயத்தோடு ஒன்றித்திருப்பதற்காகவும், உலகில் இரக்கம்நிறை மறைப்பணியில் ஒன்றிணைந்து நுழைவதற்காகவும், என்னோடு சேர்ந்து செபியுங்கள்” என்ற சொற்கள், ஜூன் 28, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வோர் ஆண்டும் இயேசுவின் தூய்மைமிகு இருதய திருவிழாவன்று, அருள்பணியாளர் புனிதமடையும் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

மேலும், Knights of Malta எனப்படும் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Giacomo Dalla Torre del Tempio di Sanguinetto அவர்களையும், பணியை நிறைவுசெய்யும், திருப்பீடத்தின் பரகுவாய் நாட்டுத் தூதர் Esteban Kriskovic அவர்களையும், ஜூன் 28, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2019, 15:43