'தாலித்தா கும்' அமைப்பினரின் கண்காட்சியைப் பார்வையிடும் திருத்தந்தை பிரான்சிஸ் 'தாலித்தா கும்' அமைப்பினரின் கண்காட்சியைப் பார்வையிடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள்’

UISG அமைப்பில், 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, ஏறத்தாழ நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் அருள்சகோதரிகளைக் குறிக்கும், துறவு சபைகளின் 1,900 தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

‘தாலித்தா கும் (Talitha Kum)’ எனப்படும், அருள்சகோதரிகளின் மனித வர்த்தகத்திற்கு எதிரான உலகளாவிய அமைப்பு தொடங்கப்பட்டதன் பத்தாம் ஆண்டையொட்டி, ‘அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள் (Nuns Healing Hearts)’ என்ற தலைப்பில், கண்காட்சி ஒன்றை, மே 10, இவ்வெள்ளியன்று ஆரம்பித்து வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

UISG எனப்படும், உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு, மே 6 இத்திங்கள் முதல், மே 10, இவ்வெள்ளி வரை, உரோம் நகரில் நடத்திய, 21வது பொது அமர்வின் இறுதியில், இதனை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆரம்பித்து வைத்தார்.

UISG அமைப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர்-குடிபெயர்ந்தோர் திருப்பீட துறையின் ஒத்துழைப்புடன், கலிலேயோ அறக்கட்டளையின் உதவியுடன், அருள்சகோதரிகளின் குணமளிக்கும் இதயங்கள்’ என்ற கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது, UISG தலைமை அலுவலகத்தில், வருகிற ஜூலை 10ம் தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். மனித வர்த்தகம் சார்ந்த புகைப்படங்கள், மனித வர்த்தகத்தை ஒழிக்க அருள்சகோதரிகள் ஆற்றும் பணிகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

UISG அமைப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, ஏறத்தாழ நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் அருள்சகோதரிகளைக் குறிக்கும், துறவு சபைகளின் 1,900 தலைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2019, 16:02